உலகம்

அதிகரிக்கும் கடற்கொள்ளை – 04 கப்பல்கள், 100 மாலுமிகள் சோமாலியர்கள் வசம்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் நான்கு நாட்களில் இரண்டு கப்பல்களைக் கடத்தியுள்ளனர்.

மத்தியக்கிழக்கில அதிகரித்து வரும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு மத்தியில், சோமாலியா மற்றும் ஏமன் கடற்பரப்பில் கடற்கொள்ளை மீண்டும் பெரிய அளவில் தலைதூக்குகிறது என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது.

சோமாலியாவின் புன்ட்லாந்து Puntland  கடற்கரைக்கு அப்பால் கேமரூன் கொடியுடன் கூடிய எம்/வி லுட்டுஃப் (M/V LUTUF) கப்பலும், ஏமன் கடற்கரைக்கு அப்பால் எரித்திரிய கொடியுடன் கூடிய சிபு 1 (SIBU 1) என்ற எண்ணெய் கப்பலும் கடந்தப்பட்ட நான்கு கப்பல்களில் உள்ளடங்கியுள்ளன.

மொகடிஷுவில் உள்ள ஒரு இராணுவப் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த துருக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை லுட்டுஃப் கப்பல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கப்பல் கடந்த திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், ஆயுதங்கள், தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்களை ஏற்றிச் சென்றது.

குறித்த கப்பலில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்களில்  ஆறு இந்தியர்கள், ஒரு துருக்கியர், ஒரு ஜார்ஜியர் மற்றும் இரண்டு செர்பியப் பாதுகாப்புக் காவலர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஏமன் கடற்பகுதியில், சிபு 1 என்ற கப்பல் ஏழு ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் தனியாகக் கடத்தப்பட்டு, சோமாலிய கடல் பகுதியை நோக்கித் திருப்பிவிடப்பட்டது.

இந்த எரிபொருள் கப்பல் ஈரானின் நிழல் கடற்படையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும், ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ராஸ் ஈசாவிற்கு வழக்கமாக எரிபொருளை ஏற்றிச் சென்று வந்ததாகவும் நம்பப்படுகிறது. அதன் 20 பேர் கொண்ட குழுவினரின் நிலை தெரியவில்லை.

இதேவேளை இந்த வாரம் கைப்பற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் உட்பட, தற்போது ஆறு கப்பல்கள் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அந்தக் கப்பல்களில் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சோமாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்