உலகம்

பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைத்தொடரில் நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதவிவாகியுள்ளது.

அயாகுச்சோ Ayacucho  பிராந்தியத்தின் பரினகோச்சாஸ்  Parinacochas  மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோவிலிருந்து Upahuacho 38 கிலோமீட்டர் (24 மைல்கள்) வடமேற்கே, 66.7 கிலோமீட்டர் (41 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியம் சுமார் 1 மணியளவில் (18:00 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இகா மற்றும் அரேகிபா உட்பட தெற்கு பெருவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

அயாகுச்சோவிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள், இந்த சக்திவாய்ந்த நில அதிர்வின் பின்விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன.

USGS ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை 6.7 ரிக்டர் அளவில், 14.626°S, 73.616°W என்ற அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையுடன் பதிவு செய்தது. சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்