ஐரோப்பா

ஜெர்மனி மற்றும் டென்மார்க் முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

ஜெர்மனி மற்றும் டென்மார்க் முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி அச்சுறுத்தலால் ஜெர்மனியை சேர்ந்த 450 பாடசாலைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அங்கு சாத்தியமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல் டென்மார்கிலும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு இவ்வாறான போலி வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்