எரிபொருள் விலை அதிகரிப்பு!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 392 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை 15 ரூபாவால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 458 ரூபாயாகும்.
ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை 15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 470 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோலின் விலை 12 ரூபாயால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 410 ரூபாயாக உள்ளது.
லங்கா மண்ணெண்ணெயின் விலையை 10 உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 265 ரூபாயாகும்.




