ஐரோப்பா

கீவின் தொடர் தாக்குதல் – கிரிமியா தீபகற்பத்தில்  பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தம்

  • June 22, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள  கிரிமியா தீபகற்பத்தில்  பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9:00 மணி முதல், கிரிமியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் தனிநபர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கான ரொக்கம், ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் பற்றுச்சீட்டுகள் மூலமான எரிபொருள் விற்பனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. “கிரிமியா குடியரசின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விற்கப்படும்,” என்று அப்பகுதியின் தலைவர் செர்ஜி அக்சியோனோவ் (Sergey Aksyonov) தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குடியிருப்பாளர்களை […]

இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை  10 ரூபாய் உயர்த்தப்பட்டு,  392 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை  15 ரூபாவால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை  458  ரூபாயாகும். ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை  15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை  470 […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல்!

  • April 11, 2026
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR குறியீட்டு முறைமை இன்றி பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணியாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தக் காலப்பகுதியில் ஒற்றை, இரட்டை நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.