ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

மியான்மருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பாதுகாப்பு இணைப்பாளரை வெளியேற்றிய பிரித்தானியா

ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், அதற்கு மியான்மர் பொறுப்பானது என்றும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய தீர்ப்புக்கு உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ரோஹிங்கியா சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், அதற்கு மியான்மர் பொறுப்பானது என்றும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய தீர்ப்புக்கு உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ரோஹிங்கியா சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், இந்தத் தீர்ப்பு மனிதகுலத்துக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றுக்கு மியான்மர் பொறுப்பானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா மக்களின் துயரம் மனிதகுலத்தின் மீதான கறையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா, மியான்மரின் பாதுகாப்பு இணைப்பாளரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளதுடன், அந்நாட்டின் தூதரகப் பொறுப்பாளரை அழைத்து விளக்கமளிக்குமாறும் கோரியுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டவும் வலியுறுத்தியுள்ளது.

ரோஹிங்கியா மக்களின் அடையாளம், குடியுரிமை மற்றும் பாதுகாப்பான தாயகம் திரும்புதல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்புகளும் மேற்படி தீர்ப்பை வரவேற்றுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி