உலகம்

கயானாவில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 83 பேர் மாயம்

கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.வி. பரிமா என்ற பயணிகள் கப்பல் கடந்த சனிக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த கப்பலில் பயணித்த 83 பேரை இன்னும் காணவில்லை எனவும் அவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பிரதமர் மார்க் பிலிப்ஸ்  தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கப்பலில் பயணித்த 15 குழந்தைகள் உட்பட 69 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் படகில் 179 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.

ஒரு பெரிய அலை தாக்கியதால், படகு திடீரென கவிழ்ந்து சில நொடிகளில் தண்ணீர் நிரம்பியதாக உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், படகின் கேப்டனும் மற்றொரு பணியாளரும் போதைப்பொருள் பயன்படுத்தியதை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக, கேப்டனையும் ஒரு குழுவினரையும் காவல்துறை கைது செய்துள்ளதுடன், அலட்சியமாக செயல்பட்டவர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்