இந்தியா செய்தி

‘ஆபரேஷன் சிந்​தூர்’: முக்கிய பங்காற்றியவர் இந்திய விமானப் படை தளபதியாக நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளப​தி​யாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்திய விமானப் படையின் புதிய தளப​தி​யாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​திய விமானப் படை​யில் தற்​போது தளப​தி​யாக உள்ள ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் பணிநிறைவு பெற உள்​ளார்.

இந்த நிலை​யில் புதிய தளப​தி​யாக ஏர் மார்​ஷல் அசுதோஷ் தீட்​சித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட ‘தேஜஸ்’ போர் விமானங்​கள் மற்​றும் உள்​நாட்டு விமானத் திட்​டங்​களை விமானப் படை​யில் தீவிர​மாக ஊக்​கு​வித்​த​தில் இவர் முக்​கியப் பங்​காற்​றிய​வர்.

மிராஜ்-2000, மிக் ரகங்​கள், கிரண், ஜாகு​வார், ஐஎல்​-78, ஹாக் மற்றும் தேஜஸ் உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான போர் விமானங்களில் 3,500 மணி நேரத்​துக்​கும் மேலாகப் பறந்த அனுபவம் கொண்​ட​வர்.

சுமார் நான்கு தசாப்த கால தற்​காப்​புப் பணி​யில், கார்​கில் போரின்​போது நடந்த ‘ஆபரேஷன் சபேத் சாகர்’, ‘ஆபரேஷன் ரக் ஷக்’ மற்​றும் ‘ஆபரேஷன் சிந்​தூர்’ உள்​ளிட்ட முக்​கிய ராணுவ நடவடிக்​கை​களில் இவர் தீவிர​மாகப் பங்​காற்​றி​யுள்​ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி