தொலைபேசி பயன்பாட்டை கட்டுப்படுத்த மெக்ஸிகோவில் புதிய விதிமுறைகள் அறிமுகம்
பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வழிக்காட்டு நெறிமுறைகளை மெக்ஸிகோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் திரையைப் பார்க்கும் நேரத்தால் (screen time) ஏற்படும் விளைவுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய கல்வி நோக்கங்களுக்காகச் சாதனங்கள் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உயர்நிலைப் பாடசாலைகள் தங்கள் சொந்தக் கட்டுப்பாடுகளை வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் “நெறிமுறைகள் மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் குடியுரிமைக்காக” பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கப் பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் வரும் நவம்பவர் மாதம் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.
இது தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் செல்போன் மற்றும் டேப்லெட் (tablet) பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.




