அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கு 02 பங்குகள் வழங்குவதாக மஸ்க் உறுதி
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு பங்குகள் வழங்குவதாக தொழில் அதிபரும், ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிதாக வெளியிடப்பட்ட தனது கிளாஸ் ஏ பொதுப் பங்குகளில் ஒன்றை, தற்போது செயல்பாட்டில் உள்ள ட்ரம்ப் கணக்கிற்கு வழங்கும் என்றும், நிறுவனம் நன்கொடையாக வழங்கும் பங்குகளின் எண்ணிக்கைக்குச் சமமான பங்குகளை மஸ்க் தனிப்பட்ட முறையில் வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு நன்கொடைகள் ட்ரம்ப் கணக்குடன் இணைக்கப்படுமா என்பது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் ஒன்றை வழங்குவதாக மஸ்க் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




