உலகம் செய்தி முக்கிய செய்திகள்

காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றத் திட்டம்

பாலஸ்தீன நாடு அமைய இடமில்லை என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
??????????????????????????????????????????????????????????

காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை என்பதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறும் “சுய விருப்ப இடப்பெயர்வு” என்ற கருத்தாக்கத்தை அவர் ஆதரித்துப் பேசியுள்ளார்.

இந்த நடவடிக்கையானது காசாவில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் இனச்சுத்திகரிப்பு முயற்சி என்று விமர்சகர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை அமைப்பது குறித்தும் மேற்படி நேர்காணலின்போது நெதன்யாகு மழுப்பலான பதிலையே அளித்துள்ளார்.

இப்பிராந்தியத்தில் ஒருபோதும் பாலஸ்தீன நாடு அமைய இடமில்லை என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி