உலகம்

நமது விதியின் எஜமானர்கள் – வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் கனடா

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் இன்று தனது வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளது.

நிதியமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் Francois-Philippe Champagne   வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவு திட்டத்திற்கு மார்க் கார்னி, நமது விதியின் எஜமானர்கள்” (Masters of our Destiny) என்று பெயரிட்டுள்ளார்.

“எங்கள் திட்டத்தின் சாராம்சம், கனடாவின் வளர்ச்சி மாதிரியை மாற்றுவதே ஆகும்,” என்று நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் Francois-Philippe Champagne கூறியுள்ளார்.

உள்நாட்டு வர்த்தகத்தை அதிகரிப்பதும், “நமது வர்த்தகத்தைப் பன்முகப்படுத்தே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைக்குத் தெற்கே என்ன நடந்தாலும் சரி, உலகில் என்ன நடந்தாலும் சரி, நாம் மேலும் மீள்திறன் கொண்டவர்களாக, மேலும் வலிமையானவர்களாக, மேலும் சுதந்திரமானவர்களாக இருப்போம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு கனடாவுக்கு சாதகமாக அமைந்திருந்தாலும் அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்க ஒட்டாவா இலக்கு வைத்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்