உலகம்

கனடாவுக்கு ‘இணை உறுப்பினர்’ அந்தஸ்து – ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

  • September 13, 2026
  • 0 Comments

கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை விரும்புகிறது என்றும், அந்த அமைப்பில் கனடா ஒரு “இணை உறுப்பினராக” (associate member) இணைய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது என்றும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கடந்த காலங்களில் உறுப்பினர் சேர்க்கை விதிகள் விஷயத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படாத ஐரோப்பிய ஒன்றியம், தற்போது […]

உலகம்

“கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது” – ட்ரம்ப்

  • August 26, 2026
  • 0 Comments

கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது  என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா மீதான வரிவிதிப்பை தொடர்ந்து அந்நாடு பதில் நடவடிக்கையாக அமெரிக்கா மீது வரி விதித்துள்ளது. இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்ட ட்ரம்ப், நமக்குத் தேவையான எதுவும் அவர்களிடம் இல்லை, சரி, நம்மால் சமாளிக்க முடியும். அதாவது, ஓரிரு விஷயங்கள் சற்று சிரமத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவற்றை நாம் வேறு இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இனிமேல் உங்களால் இப்படிச் செய்ய முடியாது” […]

உலகம்

கனடா மீது கூடுதல் வரி – பதில் நடவடிக்கையை அறிவிக்கும் ஒட்டாவா

  • August 25, 2026
  • 0 Comments

கனடா மீது ட்ரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்துள்ள நிலையில், ஒட்டாவா இன்று பதில் நடவடிக்கையை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்காவின் தீர்வைகளுக்கு ஈடாக டொலருக்கு   டொலர் என்ற விகிதத்தில் தீர்வைகளை விதிக்கும் போக்கிலிருந்து ஒட்டாவா விலகி, அதற்குப் பதிலாக கனடிய தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேலும் இலக்கு வைக்கப்பட்ட பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்” என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி Mark Carney கூறியுள்ள நிலையில் புதிய அறிவிப்புகள் வரவுள்ளளன. கனடிய வாகனங்கள், வாகன […]

உலகம்

கனடா மீதான புதிய வரிகள் – நள்ளிரவுக்கு பின் நடைமுறைக்கு

  • August 22, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் – கனடாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ளதை தொடர்ந்து கனடா மீது  ட்ரம்ப் நிர்வாகம் வரி விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பானது இன்று நள்ளிரவுக்கு பின் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 22 அன்று நள்ளிரவுக்குப் பிறகு பிரிவு 338-இன் கீழ் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் […]

உலகம்

காங்கோவிற்கு பயணித்த வெளிநாட்டினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு

  • July 19, 2026
  • 0 Comments

எபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்” என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகள், ஜூலை 20, முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது   எபோலா பரவலைக் கட்டுப்படுத்த […]

உலகம்

கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு – வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பெரும் பகுதிகளை மூடியுள்ள காட்டுத்தீப் புகைக்கு கனடாவே காரணம் என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப் அந்த நாட்டிற்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வன மேலாண்மையில் கனடா “வேண்டுமென்றே அலட்சியம்” செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அந்தப் புகை “அசுத்தமான, மாசடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற காற்றை” ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டொலர் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார். கனடாவில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் 900-க்கும் […]

உலகம்

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் அமெரிக்காவில் வளிமாசடைவு

  • July 16, 2026
  • 0 Comments

கனடாவில் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான காட்டுத்தீயிலிருந்து வெளியான அடர்த்தியான புகை, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முதல் வடகிழக்குப் பகுதி வரையிலான பரந்த நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அசுத்தமான காற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IQAir என்ற கண்காணிப்பு நிறுவனத்தின்படி, டெட்ராய்ட்  (Detroit ) நகரம் உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்டிருந்தது. அங்கு காற்றின் அளவு 600 ஆகப் பதிவானது. இது, அமெரிக்க சுற்றுச்சூழல் […]

உலகம்

கனடாவில் யூதர்கள் செறிந்து வாழும் பகுதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

  • June 23, 2026
  • 0 Comments

கனடாவின் மொன்டிரியலில் திங்கட் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். பெருமளவான யூதர்கள் வசிக்கும் பகுதியில் மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் மற்றும் தாக்குதல்தாரி உள்ளட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்சிச்சூட்டுக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் பிரெஞ்சு மொழி பொது ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ கனடா, தாக்குதல்தாரியை “இன்செல்” சித்தாந்தத்துடன் தொடர்புடையவர் விவரித்துள்ளது. இன்செல் என்பதன் பொருள் “விருப்பமின்றி பிரம்மச்சரியத்தை […]

உலகம்

கனடாவில் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் குற்றக் கும்பல்!! பணம் மட்டுமே இலக்கு!

  • May 30, 2026
  • 0 Comments

கனடாவில் சுமார் 1000 பேரை கொண்ட இந்தியக் கும்பல் ஒன்று நாடு முழுவதும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் ( Lawrence Bishnoi) என்று அழைக்கப்படும் இந்த கும்பல் தாக்குதல் எச்சரிக்கை அடங்கிய கடிதத்தை ரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள  காவல் நிலையமொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் கனேடிய வணிக நிறுவனங்கள் பணம் செலுத்த மறுத்தல் வன்முறையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக […]

உலகம் செய்தி

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மீது ஏற்றுமதி கட்டுப்பாடு – சீனா அறிவிப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

சீனா ஃபென்டானில்  (Fentanyl) தயாரிப்புக்கான  மூன்று மூல வேதிப்பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை  இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கு அவற்றின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை போதைப்பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், செயற்கை போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய மேலும் எட்டு வேதிப்பொருட்கள் குறித்து எச்சரித்து, வணிக நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் […]