Consent Preferences
செய்தி

டெல்லியில் பாரிய கடத்தல் வலையமைப்பு சுற்றிவளைப்பு -164 பேர் மீட்பு

சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து இந்திய அரசாங்கம் 164 பேரை மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசோட சோதனை நடவடிக்கையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்படி குறித்த மோசடிகளில் சிக்கிய 92 இந்தோனேசியர்கள் மற்றும் 72 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வருமானம் தரும் தகவல் தொழில்நுட்ப வேலைகள் தருவதாக வாக்குறுதியளித்து அவர்கள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு, இணையவழிக் குற்றங்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கும்பலிடம் இருந்து மலேசியர் ஒருவர் தப்பித்த நிலையில், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இந்த பாரிய மோசடி கும்பல் பிடிப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவிற்கு வருகை தந்ததும் தங்களின் கடவுச்சீட்டு கையகப்படுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி