ukவில் தஞ்சம் கோருவோருக்கு சொந்த இடங்களை வழங்கும் தனியார் நிறுவனங்கள்
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோருக்கு தங்குமிடங்களை அமைப்பதற்காக சில தனியார் கட்டட உரிமையாளர்கள் தங்கள் இடங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ட்ரௌடில் உள்ள கெய்ன்ஸ்கிராஸில் இருக்கும் டிரைகார்ன் ஹவுஸ் Tricorn House in Cainscross, Stroud. இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இந்தக் கட்டிடம் விலெட்னிக் ஹோல்டிங்ஸ் லிமிடெட் Vilednik Holdings Ltd, என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
தஞ்சம் கோருவோருக்கான தங்குமிடத் திறனை அதிகரிக்கவும், தங்கும் விடுதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கள் அரசாங்கத்திற்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை இது காட்டுவதாக ஆளும் தரப்பு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த முன்மொழிவு உள்ளூர் எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சைமன் ஓஃபர், Simon Opher இந்தக் கட்டிடம் அதற்குப் பதிலாக உள்ளூர் வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அளிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடுகிறார்.
எவ்வாறாயினும் இது தொடர்பான இறுதி முடிவை சொத்து உரிமையாளர்கள் மற்றும், உள்துறை அமைச்சகம் மாத்திரமே தீர்மானிக்கிறது.
அதே நேரத்தில் முன்மொழியப்பட்ட பயன்பாட்டைத் தடுக்க கவுன்சிலுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


