சர்வதேச பட்டதாரிகளுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியது ஆஸ்திரேலியா
சர்வதேச பட்டதாரிகளுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் உயர்த்தியுள்ளது.
இதற்கமைய ஆஸ்திரேலியாவிற்குள் சமர்ப்பிக்கப்படும் தகுதியான தற்காலிகப் பட்டதாரி விசா (துணைப்பிரிவு 485) விண்ணப்பங்களுக்கான கட்டணம் 1500 டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வழக்கமான விண்ணப்பக் கட்டணம் $5,750-லிருந்து $7,250-ஆக அதிகரி்க்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டணம், இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இந்தப் புதிய கட்டணம், தகுதியான குடும்ப மற்றும் பிற உள்நாட்டு விசா விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் அதேவேளையில் வெளிநாட்டு விண்ணப்பங்கள் பாதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




