ஐரோப்பா

உள்ளுராட்சி தேர்தல் : ஸ்டாமருக்கு கடும் பின்னடைவு!

பிரித்தானியாவின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று  நடைபெறுகிறது.

இந்த தேர்தல் பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து முழுவதும் சுமார் 5,000 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களையும், ஒரு சில மேயர்களையும், அத்துடன் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பகுதிளில் தன்னாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெறுகிறது.

காலை 07 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு இரவு 10 மணிக்கு நிறைவடையவுள்ளது. அதேநேரம் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டு நாளை நண்பகல் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்கள்  குப்பை சேகரிப்பு, சுவரெழுத்துகள் மற்றும் சாலைக் குழிகள் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்.

ஆனால் இம்முறை நடைபெறும் தேர்தல்   பிரதமருக்கான ஒரு பொது வாக்கெடுப்பாக எதிர்பாளர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலின் பிரதிபலிப்பு ஸ்டாமருக்கு எதிராக சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தேசிய தேர்தலின்போது தொழிற்கட்சி தலைவர் பதவியை ஸ்டாமர் இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!