உலகம்

”தாய்நாட்டை பாதுகாப்போம்” : கியூப மக்கள் முழுக்கம்!

கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், புதிய தடைகள் “கூட்டுத் தண்டனைக்கு” சமம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நேற்று நடைபெற்ற மாபெரும் பேரணியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பேரணியில் தாய்நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கங்களும் எதிரொலித்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை பதவியிலிருந்து நீக்கிய பின்னர், ஹவானா மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ட்ரம்ப் பொருளாதார தடைகளை அறிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கியூபாவின் வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசாங்கத்தால் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான கட்டாய நடவடிக்கைகளை நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

புளோரிடாவிலிருந்து 145 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கியூபாவைக் கைப்பற்றுவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருகின்றார்.

ஈரான் போரை தொடர்ந்து ட்ரம்பின் அடுத்த இலக்காக கியூபா மாறியுள்ள நிலையில் இவ்வாறான பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!