உலகம்

50 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் விசா கட்டணம் உயர்வு

ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு ஜப்பான் அரசாங்கம்   வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் புதிய விசா கட்டணங்கள் வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்டண அமைப்பின் கீழ், ஒற்றை நுழைவு விசாவின் கட்டணம் 3,000 ஜப்பானிய யென்னிலிருந்து 15,000 ஜப்பானிய யென்னாகவும், பல நுழைவு விசாவின் கட்டணம் 6,000 ஜப்பானிய யென்னிலிருந்து 30,000 ஜப்பானிய யென்னாகவும் உயரும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் டோஷிமிட்சு மொட்டேகி, “தற்போதைய விசா கட்டணம் 1978 இல் நிர்ணயிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் சமீபத்தில் அதைத் திருத்தியுள்ளோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்