உலகம்

சிரியாவில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்க தூதர் எச்சரிக்கை

சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுவத்துவதாக அமெரிக்க சிறப்புத் தூதர் டாம் பராக் Tom Barrack எச்சரித்தார்.

இட்லிப் மாகாணத்தில் உள்ள விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையைக் குறிவைத்து எட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை பொருள் சேதத்தை ஏற்படுத்தியதே தவிர, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிரிய அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2024-ல் பஷார் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத அந்த விமானப்படைத் தளத்தை துருக்கி புனரமைத்து வருவதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டது.

அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது, இது சிரிய இராணுவ சொத்துக்களை செயலிழக்கச் செய்வதற்காக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான தாக்குதல்களைத் தொடங்கத் தூண்டியுள்ளது.

டமாஸ்கஸில் உள்ள புதிய அதிகாரிகள் இஸ்ரேலுடன் மோதலை நாடவில்லை என்று கூறி வந்தாலும், இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்