உலகம்

சிரியாவில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து – 14 பேர் பலி

  • September 9, 2026
  • 0 Comments

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மடா நகருக்கு அருகே, ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்ட பகுதியில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போரின் எஞ்சிய பாகங்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த பணியாளர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம்

சிரியாவில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்க தூதர் எச்சரிக்கை

  • August 18, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுவத்துவதாக அமெரிக்க சிறப்புத் தூதர் டாம் பராக் Tom Barrack எச்சரித்தார். இட்லிப் மாகாணத்தில் உள்ள விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையைக் குறிவைத்து எட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை பொருள் சேதத்தை ஏற்படுத்தியதே தவிர, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிரிய அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் 2024-ல் பஷார் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத […]

உலகம்

18 மாத கால பேச்சுவார்த்தை : சிரியா – ரஷ்யாவிற்கு இடையில் ஒப்பந்தம்

  • August 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்ள மொஸ்கோவின் இராணுவத் தளங்களின் எதிர்காலம் குறித்து அந்நாட்டுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 18 மாத கால தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டார்டஸ் மற்றும் ஹ்மெய்மிமில் உள்ள ரஷ்ய தளங்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக சிரியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சிரிய வெளியுறவு அமைச்சகம் நேற்று இந்த தகவலை உறுதிப்படுத்தியது. […]