உலகம்

சோமாலிலாந்துக்கான முதல் தூதரை நியமித்தது இஸ்ரேல்!

இஸ்ரேலிய அரசாங்கம் சோமாலிலாந்துக்கான (Somaliland) தனது முதல் தூதரை நேற்று நியமித்துள்ளது.

கென்யாவிற்கான இஸ்ரேலிய தூதராகப் பணியாற்றிய மைக்கேல் லோடெமின் (Michael Lotem) புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலான தூதரகத் தனிமைப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சோமாலிலாந்தை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது.

இஸ்ரேலின் இந்நடவடிக்கையை வரவேற்றுள்ள அந்நாட்டின் ஜனாதிபதி  அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி (Abdirahman Mohamed Abdullahi), நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், இஸ்ரேல் தன்னை ஒரு “நம்பகமான கூட்டாளி” என்று நிரூபித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் மேற்படி நடவடிக்கையை கண்டித்து சோமாலியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!