விளையாட்டு

ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி படைத்த புதிய சாதனை

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதமடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 233 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த வரிசையில் 6,536 ரன்களுடன் ஷிகர் தவான் 2-ம் இடத்திலும், 6,189 ரன்களுடன் டேவிட் வார்னர் 3-வது இடத்திலும், 6,063 ரன்களுடன் ரோகித் சர்மா 4-வது இடத்திலும், 5,528 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா 5-வது இடத்திலும் உள்ளனர்

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content