அறிவியல் & தொழில்நுட்பம்

வேலை மீது வெறுப்பா? அறிந்திருக்க வேண்டியவை

வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய சரியான அறிமுகத்தை உருவாக்கிக்கொள்வது கடினமானது என்றாலும்கூட வழக்கமான வேலைவாய்ப்பு பொறிகளில் சிக்காமல் இருப்பது இன்னும் முக்கியமானது.

முதலாவது தவறு

யோசிக்காமல் கால் வைப்பது

“நிர்வாகம் சார்ந்த வேலை வேண்டும் அல்லது வேகமாக வளரும் நிறுவனத்தில் வேலை தேவை’’ என்பது போன்ற தெளிவில்லாத இலக்கை கொண்டிருக்கும் பலர் தவறான வேலையில் மாட்டிக்கொள்கின்றனர். இப்படி தெளிவான இலக்கு இல்லாமல் இருப்பவர்கள் இவர்களின் தேடல் வலுவில்லாமல் இருப்பதோடு குறிப்பிட்ட பண்பை வெளிப்படுத்துவதும் இல்லை” என்கிறார் தி அன்ரிட்டர்ன் ரூல்ஸ் ஆஃப் தி ஹைலி ஃபக்டிவ் ஜாப் சர்ச் புத்தகத்தை எழுதிய ஆர்வில் பியர்சன்.

What can I do if I hate my job? Here are 5 things

எப்படி சரி செய்வது?
உங்களிடம் பயோடேட்டா இருக்கிறது. ஆனால் உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் என்ன? “உங்களைப்பற்றி நன்றாக யோசித்து, பலமாக இருக்கும் அம்சங்களை கண்டறியுங்கள். நீங்கள் செய்ய விரும்பும் வேலை பற்றி, உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வேலை குறித்து கற்பனை செய்து பாருங்கள். இந்த வரையரைக்குள் வரும் நிறுவனங்களை கண்டறிந்து விண்ணப்பிக்கவும்” என்கிறார் தில்லியைச் சேர்ந்த பணி வாழ்க்கை ஆலோசகரான ஷுபி டாண்டன். நிறுவனம் பற்றி கூகுள் செய்து அறியும் செய்திகளுடன் வர்த்தக வலைப்பதிவுகள்,   தளங்கள் தகவல் சுரங்கமாக விளங்குபவை. நிறுவனம் தொடர்பு கொள்ள விரும்பும் தகவல்கள் பற்றி அறிந்துகொள்ள லின்க்டுஇன் தளமும் நல்ல இடம்.

I work from home in a job I hate. I cry every morning | Relationships | The  Guardian

இரண்டாவது தவறு
உங்கள் வலைப்பின்னலை பயன்படுத்தாமல் இருப்பது
“சரியான நபரை அடைய தொடர்புகளை பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் இருப்பவர் யாரையும் தெரியவில்லை என்றால் நெட்வொர்கிங் நிகழ்வுகளுக்கு சென்று கை குலுக்குங்கள்” என்கிறார் ஷுபி. நெட்வொர்கிங் என்பது எண்ணிக்கை விளையாட்டு. முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள ஒருவரை அடைய சராசரியாக 14 பேரை சந்திக்க வேண்டியிருக்கும்.

எப்படி சரி செய்வது
நீங்கள் நுழைய விரும்பும் துறையில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள். “தொழில்முனைவோராக நான் பல நெட்வொர்கிங் நிகழ்வுகளில் பங்கேற்கிறேன். நான் சந்திக்கும் மனிதர்களை நேர்காணல் செய்து யூடியூப்பில் போடுகிறேன். அவர்களில் பலர் எனது ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்துள்ளனர்” என்கிறார் இணைய கல்வி மேடையான யுனாஅகாடமியின் சி.இ.ஓ கவுரவ் முன்ஜால்.

Millennial therapist: Why young people hate their jobs so much

மூன்றாவது தவறு
ஆன்லைன் இருப்பு இல்லாதது
ஒரு காலத்தில் வரி விளம்பரங்கள் மூலம் வேலை தேடினோம். ஆனால் அந்தக் காலம் மாறிவிட்டது. வேலைவாய்ப்பு அதிகாரிகள் உங்களைப்பற்றி கூகுள் செய்து பார்ப்பார்கள். உங்களை மோசமாக சித்தரிக்கும் ஒளிப்படங்கள் தோன்றுவது நல்லதல்ல. லிங்க்டுஇன் பக்கத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். 200 நாடுகளில் 30 கோடிக்கும் மேல் பயனாளிகளை கொண்ட லின்க்டுஇன் வேகமாக வளரும் சமூக வலைப்பின்னல் மேடை.

எப்படி சரி செய்வது
தொடர்புகள், பரிந்துரைகளுடன் உங்கள் லின்க்டுஇன் பக்கம் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இலக்கணப் பிழைகள், செல்பீக்கள் போன்றவற்றை தவிர்க்கவும். எழுத்தாளர் என்றால் உங்கள் படைப்புகளை பிரதிபலிக்கும் வலைப்பதிவு தேவை. மீடியம்.காம் போன்ற பதிப்பு சேவைகளை நாடலாம்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content