விளையாட்டு

INDvsENG Day1 – இரண்டு சதங்களுடன் வலுவான நிலையில் இந்திய அணி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் இந்திய அணி திணறியது. 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடி சதமத்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.

இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content