ஐரோப்பா

பிரித்தானியாவின் பொருளாதார நிலை குறித்து IMF இன் கணிப்பு!! ரேச்சல் ரீவ்ஸ் ஆதரவு!

இங்கிலாந்து அரசாங்கம் தனது தற்போதைய நிதிசார் அணுகுமுறையை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

சந்தை அழுத்தங்களையும் உலகளாவிய சவால்களையும் தணிப்பதற்காக, நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு உகந்த  செலவினங்கள் குறித்த நிதி அமைச்சரின் அணுகுமுறையை ஆதரித்து, IMF  இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தை ஓரளவு மேம்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 2026-ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விரிவாக்கத்தை 0.8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக இப்போது கணித்துள்ளது.

இருப்பினும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் காரணமாக இது முந்தைய கணிப்புகளை விடக் குறைவாகவே உள்ளது.

இந்த மேம்படுத்தல் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் தொடரும் மோதல் குறுகிய கால வாய்ப்புகளை மந்தப்படுத்துவதாகவும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கடன் வாங்கும் விகிதங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் மேம்படுத்தப்பட்ட கணிப்புகளையும், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்திற்கான அதன் அங்கீகாரத்தையும் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் வரவேற்றுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்