அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கை இரத்தக் களரிக்கு வழிவகுக்கும் – கியூபா எச்சரிக்கை!
கியூபாவுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கணக்கிட முடியாத விளைவுகளை” ஏற்படுத்தும் ஒரு “இரத்தக் களரிக்கு” வழிவகுக்கும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல் (Miguel Diaz-Canel) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கியூபா 300-க்கும் மேற்பட்ட இராணுவ ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகவும், அவற்றை அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை தொடர்ந்து மிகுவல் தியாஸின் எச்சரிக்கை வந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கியூபா ஒரு அச்சுறுத்தலாக இல்லை” என்று கூறியுள்ளதுடன், மேற்படி தகவல்களையும் மறுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கருத்தை வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸும் (Bruno Rodriguez) எதிரொலித்தார். மேலும் கியூபாவின் முறையான தற்காப்பு உரிமையை அவர் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா கியூபாவின் எரிசக்தி விநியோகத்தைத் துண்டித்ததால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




