இலங்கை செய்தி

“ இலங்கை அரசியலில் தேசிய தலைவர் ஒருவர் உருவாகவில்லை”

  • January 2, 2026
  • 0 Comments

இலங்கையில் அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் இல்லை என்று எல்லே குணவங்க தேரர் Elle Gunavanga Thero தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மெலும் கூறியவை வருமாறு, “ இலங்கைக்குரிய கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்து வந்துள்ளோம். எனவே, எமது நாட்டு கலாசாரத்தில் கைவைப்பதற்கு எவரும் முற்படக்கூடாது. எமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். எமக்கு அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் ஒருவர் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் கோடை காலத்திற்குள் குறையும் வட்டி விகிதம் – பிரபல நிபுணர் கணிப்பு!

  • January 2, 2026
  • 0 Comments

இங்கிலாந்து தனது வட்டி விகிதங்களை இந்த வருடத்தின் கோடை காலத்திற்குள் 2.75 சதவீதமாகக் குறைக்கக்கூடும் என்று நிதி நிபுணர் பில் பாபடகிஸ் ( Bill Papadakis)  கணித்துள்ளார். வேலையின்மை அதிகரிப்பு மற்றும் சேவைகள் பணவீக்கம் குறைந்து வருவது ஆகியவை பொருளாதாரத்தை ஆதரிக்க பணவியல் கொள்கைக் குழுவை வேகமாகச் செயல்படத் தூண்டும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இருப்பினும், இந்த கணிப்பு ஒரு விதிவிலக்கானது. காரணம் மற்ற பொருளாதார ஆய்வாளர்கள் குறைவான விகிதக் குறைப்புகளை எதிர்பார்க்கின்றனர்.  

இலங்கை செய்தி

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு

  • January 2, 2026
  • 0 Comments

வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் போதைப்பொருட்களை இட்டு அழிக்கும் நடவடிக்கை, இன்று (02) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இடம்பெற்றது. சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள் இதன்போது தீயிட்டு அழிக்கப்பட்டன. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு, பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் […]

செய்தி தமிழ்நாடு

ஊட்டி, குன்னூரில் பலத்த மழை, 16 இடங்களில் மண் சரிவு –  ரயில் சேவைகள் பாதிப்பு

  • January 2, 2026
  • 0 Comments

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூரில் 215 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. அவ்வப்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக தென்பட்ட நிலையில், திடீரென காலநிலை மாறி மழை […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் ஏழை, செல்வந்தர்களிடையே பாகுப்பாடு காட்டும் தொழிற்கட்சி அரசாங்கம்!

  • January 2, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சியமைத்ததில் இருந்து பிரித்தானியாவில் உள்ள ஏழ்மையான குடும்பங்களின் விருப்ப வருமானம் 2.1% குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. மாறாக, மிகவும் வசதியான குடும்பங்கள் அதே காலகட்டத்தில் தங்கள் விருப்ப வருமானத்தில் 10.3% உயர்வை அனுபவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை அடிகோடிட்டு காட்டுகிறது. பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ( Sir Keir Starmer) அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். […]

அரசியல் இலங்கை செய்தி

ஆங்கில பாடபுத்தகத்தில் முறையற்ற குறிப்பு: பின்னணியில் ராஜபக்சக்களா?

  • January 2, 2026
  • 0 Comments

“தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்பது பற்றி விசாரணை அவசியம். கல்வி அமைச்சின் செயலாளர் சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த புத்தகத்தை எதிரணியா அச்சிட்டது? சிலவேளை, ராஜபக்சக்கள்தான் […]

இலங்கை செய்தி

மத்துகம பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்

  • January 2, 2026
  • 0 Comments

மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முனசிங்கவை  எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை வேலைக்குச் சென்றபோது, ​​தலைவர் தனது அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து தனது உத்தியோகபூர்வ கடமைகளில் தலையிட்டதாகக் கூறி, உள்ளூராட்சி மன்ற செயலாளர் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இதன்பின்னர் பிரதேச சபை செயலாளரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முனசிங்க பொலிஸாரால் கைது […]

இலங்கை செய்தி

ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் நளிந்த – கடும் எச்சரிக்கையும் விடுப்பு

  • January 2, 2026
  • 0 Comments

யூடியூப் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக கோரி சட்டத்தரணி ஊடாக சம்மன் அனுப்பியுள்ளார். மருந்து வகையொன்றை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் தொடர்பில் தனது பெயரை தொடர்புபடுத்தி யூடியுப் அலைவரிசையொன்றின் ஊடாக போலி தகவல்களை பரப்பி பொதுமக்களை அச்சத்துக்கு உட்படுத்தும் வகையில் அந்த யூடியூப் செயற்பாட்டாளர் செயற்பட்டதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து உள்ளிட்ட 10 வகையான மருந்துகள் தொட்ரபில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. […]

அரசியல் இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக்கொடுக்கும் செயல்: சஜித் சீற்றம்!

  • January 2, 2026
  • 0 Comments

டித்வா புயலால் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டினார். விசேட காணொளியொன்றை இன்று (02) வெளியிட்டே சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆனால், வளமான நாட்டையும், அழகான […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து கொள்ளை!

  • January 2, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலாத் தலங்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சின் (France) நைஸை (Nice) தளமாகக் கொண்ட இந்தக் குழு  motorhome  வாகனத்தை  பயன்படுத்தி நாடு முழுவதும் சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வலென்சியா (Valencia) , அண்டலூசியா (Andalusia), பலேரிக் (Balearic) தீவுகள் மற்றும் மாட்ரிட் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றவியல் குழுவை” சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,   அவர்கள் […]