ஐரோப்பா

ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து கொள்ளை!

ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலாத் தலங்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரான்சின் (France) நைஸை (Nice) தளமாகக் கொண்ட இந்தக் குழு  motorhome  வாகனத்தை  பயன்படுத்தி நாடு முழுவதும் சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வலென்சியா (Valencia) , அண்டலூசியா (Andalusia), பலேரிக் (Balearic) தீவுகள் மற்றும் மாட்ரிட் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றவியல் குழுவை” சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,   அவர்கள் அனைவரும் பல தவறான அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து €24,000   ரொக்கம், அத்துடன் மின்னணு சாதனங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவை அனைத்தும் வாகனத்தின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்