இனப்படுகொலைகள் குறித்து கனடாவின் பிரகடனம், ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரிக்கை!
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் […]













