இலங்கை

கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிடும் குழுவின் பிரதான சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் வயோதிபர்களின் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிடும் குழுவொன்றின் பிரதான சந்தேகநபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 9 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த நால்வரும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் மற்றும் மானிப்பாய் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேரூந்துகளில் பயணிக்கும் வயோதிபர்கள் மற்றும் பெண்களின் கைத்தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content