பாகிஸ்தானில் பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளான பேருந்து – 12 பேர் பலி!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கிழக்கு நகரமான லாகூர் நோக்கிப் பயணித்த பேருந்து, உப்பு மலைத்தொடர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 8 பேர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். […]













