போர் முடிவுக்கு வர வேண்டும்!! புடினை எச்சரித்த சிரில் ரமபோசா
உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்துள்ளார். மற்ற ஆறு ஆப்பிரிக்க நாடுகளுடனான அமைதிப் பணியின் ஒரு பகுதியாக, சனிக்கிழமையன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் புடினைச் சந்தித்தபோது ரமபோசாவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. உக்ரேனிய நிலத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தூதுக்குழுவிடம் தெரிவித்தார். புடின் கடந்த ஆண்டு படையெடுப்பைத் தொடங்கியதுடன், பேசுவார்த்தைகளை மறுத்ததற்காக உக்ரைனை […]













