அமெரிக்காவில் பாரிய துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள வில்லோபுரூக்கில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் விபரங்களை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஹனி சக்கிள் லேன் அருகே ரூட் 83 இல் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் ஜுன்டீன்த் கொண்டாட்டத்திற்காக ஒரு பெரிய குழு கூடியிருந்ததாகவும், இதன்போது வன்முறை வெடித்ததாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி […]













