திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி 75வயது மூதாட்டியிடம் மோசடி; 2 வாலிபர்கள் கைது
மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைதளம் மூலம் ஆசாமி ஒருவர் தன்னை ஜெர்மனியை சேர்ந்தவர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மூதாட்டியும் அது மோசடி ஆசாமி என தெரியாமல் பேசி வந்துள்ளார். ஒருநாள் அந்த நபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதில் மூதாட்டி மயங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் மூதாட்டிக்கு விலை உயர்ந்த அன்பளிப்பை அனுப்பி இருப்பதாக […]













