ஐரோப்பா

லண்டன் முழுவதும் திடீர் சோதனை – ஃபெராரி உள்ளிட்ட 90 வாகனங்கள் பறிமுதல்

லண்டன் முழுவதும் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் , ​​8 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காப்பீடு இல்லாத மற்றும் சமூக விரோத வாகன ஓட்டுதலுக்கு எதிராக பொலிஸார் இன்று திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதில் 3.7 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அரிதான ஃபெராரி மான்சா SP2 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னறிவிப்பு ஏதுமின்றி, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கார்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய அதிகாரங்களின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹைட் பார்க், கென்சிங்டன் மற்றும் செல்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் 120 பொலிஸார் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்