வட அமெரிக்கா

சிறைச்சாலைக்குள் இருந்து பாடல் காணொளி வெளியிட்ட கொலைக்குற்ற கைதி

கனடாவில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரபல இசைக்கலைஞர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இந்த காணொளி கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவின் முன்னணி ராப் இசை கலைஞரான ரப்பர் டாப் 5 என்ற பெயரையுடைய ஹசன் ஹலீ என்பவர் இவ்வாறு காணொளி என்று வெளியிட்டுள்ளார்.மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான குறித்த இசைக்கலைஞர் தற்பொழுது ஒன்றாரியோவின் சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான ஒரு பின்னணியில் இசை ஆல்பம் ஒன்றை எவ்வாறு வெளியிட்டார் என சர்ச்சை எழுந்துள்ளது.இது தொடர்பில் ஒன்றாறியோ மாகாண வழக்குரைஞர் நாயகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த இசைக் கலைஞர் சிறைச்சாலையில் இருந்து கொண்டே இணையத்தில் வலம் வந்தமை தொடர்பில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.பாதுகாப்பு மிக்க சிறைச்சாலை ஒன்றிலிருந்து இவ்வாறு காணொளிகளை வெளியிட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்