இலங்கை

சாணக்கியனை தாக்க முயற்சி: மட்டக்களப்பில் பெரும் பதற்றம்

  • July 17, 2023
  • 0 Comments

மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த தனியார் போக்குவரத்து பொறுப்பதிகாரி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவரை தாக்க முற்பட்ட இருவரை ஆர்ப்பாட்காரர்கள் துரத்தி துரரத்தி அடித்து வெளியேற்றியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை. மட்டக்களப்பு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அனுமதிப்பதிரம் இன்றி சேவையில் […]

ஐரோப்பா

சுற்றுலா சென்ற இடத்தில் சுவிஸ் இளம்பெண் செய்த தவறு ; கைது செய்த பொலிஸார்(வீடியோ)

  • July 17, 2023
  • 0 Comments

இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், புராதானச் சின்னம் ஒன்றை சேதப்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. சுற்றுலா வழிகாட்டி ஒருவர், ரோமிலுள்ள 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதானச் சின்னமான Colosseum என்னும் உலக அதிசயமாக விளங்கிய சுவரில் இளம்பெண் ஒருவர் ஏதோ கிறுக்குவதைக் கவனித்துள்ளார். அதை வீடியோவாக எடுத்த அவர், அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம், அந்த இளம்பெண் செய்தது சட்ட விரோதச் செயல் என்று கூற, அவர்களோ, […]

இந்தியா

சந்திரயான் 3 தொடர்பில் இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!

நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: 2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றது. சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை(ஜூலை 18) மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. சந்திரயான் – 3 விண்கலம் தற்போது 41 ஆயிரத்து 603 கிலோ மீட்டருக்கு 226 கிலோ மீட்டர் தூரமுள்ள […]

பொழுதுபோக்கு

குழந்தை பெற்றுக்கொள்ள வனிதா திடீர் முடிவு? கிளம்பியது புது பூகம்பம்

  • July 17, 2023
  • 0 Comments

நடிகை வனிதா தனது மகள் ஜோவிகாவிற்கு தானே குழந்தை பெற்றுக் கொடுப்பதாகவும், அவர் வளர்த்தால் மட்டும் போதும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகளான வனிதா குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து, பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் […]

இலங்கை

கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வரும் வரை.சுமார் 3 மாத காலப்பகுதிக்குள் மாணவர்கள் அந்தந்த பாடசாலைகளிலேயே தொழிற்பயிற்சி நெறியைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாணவர்கள் உயர்தரப் படிப்பைத் தொடராவிட்டாலும், இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கான சில திறன்களையும் அறிவையும் பெற முடியும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற இலங்கை – […]

ஐரோப்பா

பெண்ணை 10 வினாடிகளுக்கு குறைவாக தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை; ரோம் நீதிமன்றம் தீர்ப்பு!

  • July 17, 2023
  • 0 Comments

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவந்த 17 வயது இளம்பெண், 2022 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று உள்ளார். தனது வகுப்பறைக்கு மாடிப் படிக்கட்டில் அவர் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென யாரோ தன்னை பின்பக்கமாக தொடுவது போலவும், தனது கீழாடையை கழற்றுவது போலவும் மாணவி உணர்ந்தார். உடனே அதிர்ச்சியுடன் அவர் திரும்பி பார்த்தபோது, அவரை பார்த்து சிரித்த பள்ளியின் காவலாளி, “அன்பே, விளையாட்டுக்காக இப்படி செய்கிறேன் என்று உனக்கு தெரியும்” […]

இலங்கை

யாழில் தன்னிடம் கொள்ளையிட முயன்றவரை நையப்புடைத்த வீரமங்கை

  • July 17, 2023
  • 0 Comments

யாழ் பண்ணாகத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்த கொள்ளையன் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சங்கிலியை அறுத்த கொள்ளையனை பெண் மடக்கி வீழ்த்தி உதைத்த போது மோட்டார் சைக்கிளையும் விட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடத் தொடங்கியுள்ளான் கொள்ளையன். இதனை பார்த்த வீதியால் சென்றவர்கள் கொள்ளையனை துரத்திப் பிடித்து நையப்புடைத்து வட்டுக் கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பொதுமக்களால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் அண்மைகாலமாக கொள்ளைச் […]

பொழுதுபோக்கு

ஆபாச நடிகையிடம் செம்ம டோஸ் வாங்கிய ரோஜா… இது தேவையா உங்களுக்கு

  • July 17, 2023
  • 0 Comments

ஆந்திரா சினிமாவின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தன் வாராஹி யாத்திரையின்போது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்த்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சரும் நடிகையுமான ரோஜா “பவன் கல்யாண் வந்து ஜெகனுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருகிறார். இது சன்னி லியோனுக்கு வேதம் ஓதியது போல் இருக்கிறது” என்று தெரிவித்தார். இதையடுத்து ரோஜாவின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போது தன்னைப் பற்றிய கமெண்ட்டுக்கு சன்னி லியோன் பதிலளித்துள்ளார். அதில் “நான் ஆபாசப் […]

வட அமெரிக்கா

வாஷிங்டனில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ;6 பேர் பலி, 3 பேர் காயம்

  • July 17, 2023
  • 0 Comments

அமெரிக்கா டகோமாவில் இருந்து ‘எஸ்ஆர் 509’ நெடுஞ்சாலையில் வெள்ளைநிற எஸ்யுவி ரக கார் ஒன்று வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த கார் சாலையைக் கடக்க முயன்ற வேறொரு காரின்மீது பயங்கரமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பலமுறை உருண்டு சாலை ஓரம் சென்று நின்றது. 5 பேர் பயணிக்கக்கூடிய அந்த உருண்டோடிய காரில் 7 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் பரிதாபமாகப் பலியாகினர். மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எஸ்யூவி […]

வட அமெரிக்கா

பூங்காவில் படுத்திருந்த இளம் தாய்க்கு புல் வெட்டும் இயந்திரத்தால் நேர்ந்த சோகம்!

  • July 17, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் புல் வெட்டும் இயந்திரம் 27 வயதுடைய தாயின் மீது ஏறிச் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின், கலிபோர்னியாவில், மொடெஸ்டோ பகுதியில் உள்ள பியர்ட் புரூக் பூங்காவில் களைச்செடிகள் மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்து இருந்த இடத்தில் 27 வயதுடைய கிறிஸ்டின் சாவேஸ் என்ற பெண் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது பூங்கா நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டு இருந்த தொழிலாளி ஒருவர், புற்களை சீர்திருத்துவதற்காக புல் வெட்டும் கருவியை டிராக்டருடன் இணைத்து அப்பகுதியில் வேலையை […]