இலங்கை

யாழில் தன்னிடம் கொள்ளையிட முயன்றவரை நையப்புடைத்த வீரமங்கை

யாழ் பண்ணாகத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்த கொள்ளையன் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சங்கிலியை அறுத்த கொள்ளையனை பெண் மடக்கி வீழ்த்தி உதைத்த போது மோட்டார் சைக்கிளையும் விட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடத் தொடங்கியுள்ளான் கொள்ளையன்.

இதனை பார்த்த வீதியால் சென்றவர்கள் கொள்ளையனை துரத்திப் பிடித்து நையப்புடைத்து வட்டுக் கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பொதுமக்களால் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் அண்மைகாலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெண்னின் வீர செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்