ஆஸ்திரேலியா செய்தி

சிட்னியில் களமிறங்கினார் இஸ்ரேல் ஜனாதிபதி: பாதுகாப்பு தீவிரம்!

  • February 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (09) காலை அவர் சிட்னி வந்தார். அவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எதிராக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இஸ்ரேல் ஜனாதிபதியை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கான யூத மக்கள் ஓன்று கூடியுள்ளனர். சிட்னியில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட […]

இலங்கை செய்தி

மனிதாபிமான திட்டத்திற்கு 22.4 மில்லியன் டொலர் நிதியுதவி – ஐ.நா. அறிவிப்பு

  • February 8, 2026
  • 0 Comments

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மன், ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் […]

இலங்கை

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் : 4000இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்!

  • February 8, 2026
  • 0 Comments

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டத்தின்படி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு […]

விளையாட்டு

அயர்லாந்துக்கு 164 வெற்றியிலக்கு

  • February 8, 2026
  • 0 Comments

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து  அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது (8) இடம்பெற்று வரும் நிலையில் அயர்லாந்து அணிக்கு 164 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நீர் துறையில் வெளிப்படைத்தன்மையில்லை – நீர் நிறுவனங்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

  • February 8, 2026
  • 0 Comments

கடந்த வருடம், நீர் துறையில் தோல்வியடைந்த நிறுவன தலைமை நிர்வாகிகளுக்கு சலுகை வழங்க தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் சில நிறுவனங்கள் மில்லியன் கணக்கான பணம் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சலுகைகளை (bonus) வேறு பெயரில் வழங்குகின்றமை, அல்லது தாய் நிறுவனங்கள் வழியாக பணம் செலுத்துகின்றமைமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. உதாரணமாக, தேம்ஸ் நீர் நிறுவனம் தடை செய்யப்பட்ட சலுகைகள் வழங்கப்படாதபோதிலும், “தக்கவைப்பு கொடுப்பனவுகள்” என்ற பெயரில் தலைவர்களுக்கு பணம் வழங்க திட்டமிட்டுள்ளது. யார்க்ஷயர், தென் […]

விளையாட்டு

ஐசிசி டி20 உலகக் கிண்ணம் – நேபாளத்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

  • February 8, 2026
  • 0 Comments

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 05 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 185 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வரும் வாரத்திலும் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ள எச்சரிக்கை அமுலில்!

  • February 8, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும்  கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியதை தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 88 வெள்ள எச்சரிக்கைகள் அமுலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலான எச்சரிக்கைகள் தென்மேற்கு மற்றும் மிட்லாண்ட்ஸில் (Midlands) அமுற்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது ஸ்காட்லாந்தில் நான்கு வெள்ள எச்சரிக்கைகள் அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அடுத்த வாரம் முழுவதும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. வேல்ஸின் சில பகுதிகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸில் 2026 […]

ஐரோப்பா செய்தி

இடுப்பு வலை பாதிப்பு: இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வேதனை -அரசாங்கம் இன்னும் மௌனம்

  • February 8, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், மருத்துவ அறுவை சிகிச்சையாக உடலில் வைக்கப்பட்ட இடுப்பு வலை (pelvic mesh) காரணமாக முக்கிய உடல் மற்றும் மனநிலை பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த பாதிப்புகளுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களை நோயாளர் பாதுகாப்பு ஆணையர் டொக்டர் ஹென்றிட்டா ஹியூஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வகுத்துள்ளார். ஆனாலும், அரசாங்கம் இதுவரை எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட பெண்கள் தீவிர மன அழுத்ததுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பு வலை அறுவை சிகிச்சை பொதுவாக பெண்களின் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி மீதான கொலை முயற்சி – தாக்குதல்தாரி கைது!

  • February 8, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் உயர்மட்ட  இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீதான துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நபர் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த ரஷ்ய குடிமகன் என்றும் அவர் லியுபோமிர் கோர்பா (Lyubomir Korba) என அழைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கோர்பா டிசம்பர் மாத இறுதியில் “பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்காக உக்ரேனிய உளவுத்துறையால் நியமிக்கப்பட்டு மொஸ்கோவிற்கு வந்ததாக ரஷ்ய புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரி  மேற்படி […]

விளையாட்டு

நாணய சுழற்சியில் அயர்லாந்து வெற்றி

  • February 8, 2026
  • 0 Comments

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதற்கமைய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.