உலகம்

ஜப்பானில் திடீர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நிறைவு – ஆளும் கட்சி வெற்றிப்பெற வாய்ப்பு!

  • February 8, 2026
  • 0 Comments

ஜப்பானில் பிரதமர் சானே தகைச்சி அழைப்பு விடுத்திருந்த திடீர்த் தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. தகைச்சியின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) ஒரு தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாட்டின் முதல் பெண் பிரதமரான தகைச்சி கட்சித் தலைவராக ஆன நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த திடீர் தேர்தலை அறிவித்தார். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்துள்ளது. அத்துடன் கோமைட்டோ கட்சியுடனான கூட்டணியும் சரிந்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயாத்திட்டம் – முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு

  • February 8, 2026
  • 0 Comments

இலங்கையில் வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பில் திங்கட்கிழமை (09) வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளுராட்சி மன்றங்களினுடைய பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றம் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலின்போது கொழும்பிலிருந்து வருகை தரவுள்ள மாகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக […]

ஐரோப்பா

பணத்தை மிச்சப்படுத்தும் NHS இன் முயற்சி – காத்திருப்பு பட்டியலில் அறுவை சிகிச்சை நோயாளிகள்!

  • February 8, 2026
  • 0 Comments

NHS பணத்தை மிச்சப்படுத்த முயற்சிப்பதால் அறுவை சிசிக்சைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தாமதத்தை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் நிர்ணயித்துள்ள வரவு செலவு திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டியுள்ளதால், NHS வாரியங்கள் நடைமுறைகளை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது புதிய நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் நடைமுறைக்கு வரும் வரை நோயாளிகள் தாமதங்களை சந்திப்பார்கள் எனக் கூறப்படுகிறது. சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் (Wes Streeting) தற்போது 7.3 மில்லியன் சிகிச்சைகளைக் கொண்ட […]

இலங்கை செய்தி

அவிசாவளை பகுதியில் கோர விபத்து – மூவர் பலி

  • February 8, 2026
  • 0 Comments

அவிசாவளை,அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் காரில் நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா செய்தி

மண்டேல்சனின் தூதுவர் நியமனம் – முழு பொறுப்பையும் பிரதமர் ஏற்க வேண்டும்

  • February 8, 2026
  • 0 Comments

அமெரிக்க தூதுவராக பீட்டர் மண்டேல்சனை நியமிப்பதில் பிரதமர் ஸ்டாமர் நல்லெண்ணத்துடனேயே செயல்பட்டார் என அமைச்சரவை அமைச்சர் பாட் மெக்ஃபேடன் (Pat McFadden)தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான சம்பவம் தொடர்பில் பிரதமர் அதிர்ச்சியடைந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரினார் என்றும் அமைச்சர் கூறினார். அத்துடன் பிரதமர் எந்தவிதமான திடீர் நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமை அலுவலகத்தில் நடந்த தற்போதைய விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு பின்னர் அமைச்சர் பாட் மெக்ஃபேடன் (Pat McFadden) இதனை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் […]

உலகம்

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் மரண விவகாரத்தில் சர்ச்சை – ஆவணங்களில் ஏற்பட்ட குழப்பம்!

  • February 8, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ( Jeffrey Epstein) மரணத்தை அறிவிக்கும் ஒரு கூட்டாட்சி அறிக்கை புதிதாக வெளியிடப்பட்ட நீதித்துறை கோப்புகளில் வெளிவந்துள்ளது. ஆனால் குறித்த அறிக்கை அவர் நியூயார்க் சிறை அறையில் இறந்து கிடந்த தருணத்திற்கு முந்தைய திகதியை கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட ஆவணம் 2019 ஆகஸ்ட் 9 என்ற திகதியை குறிக்கிறது. ஆனால் சிறைச்சாலை பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ கணக்குகள், ஆகஸ்ட் 10, 2019 காலை வரை எப்ஸ்டீன் […]

ஐரோப்பா செய்தி

வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்து

  • February 8, 2026
  • 0 Comments

தங்கள் தாயகத்தில் உள்ள உறவினர்கள் அமைதியும் உரிமைகளும் வேண்டி போராடுவதால் உயிரிழந்து வருவதாக வடக்கு அயர்லாந்தில் வாழும் ஈரானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பெல்ஃபாஸ்டின் (Belfast) நகர மண்டபத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்று, ஈரானை விடுவிக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவை கோரினர். ஈரானில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களை அரசு வன்முறையுடன் அடக்கியதன் பின்னணியில் இந்த போராட்டம் இடம்பெற்றது. வெளிநாட்டில் இருந்து ஆதரவளிப்பது கூட ஈரானில் இருக்கும் உறவினர்களுக்கு ஆபத்தாக மாறக்கூடும் […]

ஐரோப்பா

உலகில் எந்த பயங்கரவாதியும் துணிந்து செய்யாததை புட்டின் செய்துள்ளார்!

  • February 8, 2026
  • 0 Comments

உக்ரைனின் அணுசக்தி அமைப்பின் மீதான விளாடிமிர் புதினின் தாக்குதல்கள் “உலகில் எந்த பயங்கரவாதியும் இதுவரை துணிந்து செய்யாத தாக்குதல் நிலை என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஆழ்ந்த குளிர் காலத்தில்  வெப்பமூட்டும் மற்றும் மின்சார வசதிகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து உலகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். புடின் வேண்டுமென்றே இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்தமையால் நாட்டில்  அவசரகால மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வரும் நாட்களில் வெப்பநிலையானது -25 பாகை […]

உலகம் செய்தி

காசாவில் அடையாளங்களின்றி சடலங்களை குவித்த இஸ்ரேல்

  • February 8, 2026
  • 0 Comments

இஸ்ரேல் காசாவிற்கு பல பலஸ்தீனியர்களின் சடலங்களை அனுப்பியுள்ளதாக பலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சடலங்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதற்கான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 54 உடல்கள் கொண்ட 120 பைகள் மற்றும் 66 தனித்தனி மண்டை ஓடு மாதிரிகளையும் ஒப்படைத்தாக தடயவியல் அதிகாரி உமர் சுலைமான் தெரிவித்துள்ளார். கடந்த பரிமாற்றங்களில், பல உடல்கள் சிதைந்து, காயம் அடைந்த நிலையில் காணப்பட்டதுடன், துஷ்பிரயோகம் மற்றும் மரணதண்டனைக்கான […]

ஐரோப்பா செய்தி

நவீன பிரித்தானியாவை காட்டாத பாடசாலை நூல்கள் – மாணவர்கள் கூறுவது என்ன?

  • February 8, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மீண்டும் வாசிப்பில் ஈடுபடுத்துவது கல்வித் துறையில் தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. இதன் மையமாக, பாடசாலைகளில் கற்பிக்கப்படும் ஆங்கில இலக்கியப் பாடத்திட்டம் உள்ளது. ‘லிட் இன் கலர்’ (Lit in Colour) என்ற இயக்கம், GCSE வாசிப்புப் பட்டியல்கள் நவீன பிரித்தானிய சமூகத்தை சரியாக பிரதிபலிக்கவில்லை என்று கூறி, அவற்றை மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. தற்போதைய பாடத்திட்டத்தில் பன்முகத்தன்மை குறைவாக இருப்பதாகவும், மாணவர்கள் வாழும் சமூகத்தின் பல்வேறு குரல்களை […]