உலகம்

கடுமையான குளிர் – நியூயார்க்கில் 18 பேர் மரணம்!

  • February 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

சூரிய மண்டலத்தின் 06 கிரகங்கள் ஒரே நேரத்தில் தோன்றும் சிறப்பு வானியல் நிகழ்வு!

  • February 10, 2026
  • 0 Comments

இந்த மாதம் வானில் 06 கிரக அமைப்புகள் ஒரே வரிசையில் நிலைபெறும் அற்புத நிகழ்வு இடம்பெறும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி , புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் அனைத்தும் வானத்தின் ஒரே பகுதியில் நிலைநிறுத்தப்படும். சில கிரகங்கள் நிர்வாணக் கண்ணுக்குத் தெரியும் எனக் கூறப்படும் அதேவேளை ஏனையவற்றை தொலைநோக்கி மூலம் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினால் ஒரு ஒளி உருவாகும் எனவும், இது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஏற்படும் என்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கொழும்புக்கு டெல்லி அழுத்தம்!

  • February 10, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்தியாகவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா அறிவுறுத்தல் விடுக்கக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மாகாணசபைத் தேர்தலுக்காகவே நாம் காத்திருக்கின்றோம். அதனை நிச்சயம் நடத்தியாக வேண்டும். ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார், எனவே, தேர்தலை நடத்துமாறு உரிய அறிவுறுத்தல் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும்.ஜனாதிபதியும் இந்தியா செல்லவுள்ளார். மாகாணசபைத் […]

அரசியல் இலங்கை செய்தி

ராஜபக்சக்களை தோற்கடிக்க போலி பிரச்சாரம்: நாமல் கொதிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

“ வடக்கு, கிழக்கு மக்களைப் பற்றி அதிகம் கதைக்கும் இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார். “வடக்கு, கிழக்குபோலவே தெற்கிலும் தற்போது ஆளுநர்கள் ஊடாகவே நிர்வாகம் இடம்பெறுகின்றது. ஆளுநர்களின் தேவைக்கேற்ப நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஜனநாயகம் பற்றி கோஷம் எழுப்பும் இந்த அரசாங்கம், மாகாணசபை விடயத்திலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். அதேவேளை, 2015 இல் ராஜபக்சக்களை […]

இலங்கை செய்தி

தப்பிச்சென்ற வேன்மீது யாழில் துப்பாக்கிச்சூடு: இளைஞன் உயிரிழப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

யாழில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற வேன்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைவேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது, நிறுத்தாமல் மண்டைதீவு நோக்கித் தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து, மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்து விட்டு அல்லைப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. அந்த வாகனம், […]

பொழுதுபோக்கு

20 ஆம் திகதி திரைக்கு வருகிறது “ஜனநாயகன்”?

  • February 10, 2026
  • 0 Comments

“ஜனநாயகன்” படம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதென தெரியவருகின்றது. இதற்குரிய ஏற்பாடுகளை பட தயாரிப்பு நிறுவனம் செய்துவருகின்றது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இந்தப் படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9 ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு தணிக்கை […]

உலகம்

சீனா இரகசியமாக அணுவாயுத சோதனை செய்ததா? – குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

  • February 10, 2026
  • 0 Comments

சீனா  இரகசிய அணுவாயுத சோதனையை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை  ஜெனீவாவில் நடந்த ஐ.நா. ஆயுதக் குறைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் துணைச் செயலாளர் தாமஸ் டினானோ (Thomas DiNanno) சீனா அணுவாயுத சோதனைகளுக்கு தயாராகி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், “அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணுசக்தி […]

விளையாட்டு

பாகிஸ்தான்,அமெரிக்கா இன்று பலப்பரீட்சை!

  • February 10, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. 10ஆவ லீக் ஆட்டத்தில் நமீபியா Namibia மற்றும் நெதர்லாந்து Netherland அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 AM மணிக்கு ஆரம்பமாகின்றது. 11 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து New Zealand , ஐக்கிய அரசு அமீரக United Arab Emirates அணிகள் களம் காண்கின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 PM மணிக்கு இப்போட்டி […]

உலகம்

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் கப்பல் ஒன்றை முற்றுகையிட்ட அமெரிக்கா!

  • February 10, 2026
  • 0 Comments

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் நேற்று அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. அத்துடன் மேற்படி தாக்குதலை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வெனிசுலாவுக்கு அழுத்தம் கொடுக்கும் “எண்ணெய் தனிமைப்படுத்தல்” உத்தியின் ஒரு பகுதியாக குறித்த கப்பல்கள் முற்றுகையிடப்பட்டதாக பாதுகாப்புச் […]

உலகம்

சிட்னி கைது நடவடிக்கையை நியாயப்படுத்தும் பொலிஸார்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொதிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog இன் ஆஸ்திரேலிய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நடைபெற்ற போராட்டத்தின்போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. பொலிஸாரை தாக்க முற்பட்டனர் என இவர்களில் 10 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னியில் சுமார் 6 ஆயிரம்பேர்வரை நேற்றிரவு திரண்டிருந்தனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்ப்புக் கூட்டத்தில் உரைகள் முடிவடைந்த பின்னர், போராட்டக்காரர்கள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். […]