இலங்கை செய்தி

குஜராத் முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் சந்திப்பு: கேரளா செல்லவும் ஏற்பாடு!

  • February 10, 2026
  • 0 Comments

ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva, இந்தியா குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலுடன் Bhupendra Rajnikant Patel பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது என ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பிரகாரமே டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ் Kitnan Selvaraj , இளங்குரமன் Ilanguraman உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர். இவ்விஜயத்தின் ஓர் அங்கமாகவே குஜராத் […]

உலகம்

கனடாவையும் – அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தை திறக்க விடமாட்டேன் : ட்ரம்ப் அச்சுறுத்தல்!

  • February 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் புதிய பாலம் திறக்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தையும் அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தையும் இணைக்கும் புதிய பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாலத்தில் குறைந்தபட்சம் பாதியையாவது சொந்தமாக்கிக் கொள்ளும் முனைப்பில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.  இதற்கமைய ட்ரம்ப் மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார். 4.7 பில்லியன் பொருட் செலவில் நிர்மாணிக்கப்படும் குறித்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2018 ஆம் […]

உலகம்

ஊழல் மிகக் குறைந்த ஆசிய நாடாக சிங்கப்பூர் தெரிவு : முதலிடம் எந்த நாட்டிற்கு தெரியுமா?

  • February 10, 2026
  • 0 Comments

உலக நாடுகளில் ஊழல் மிகக் குறைந்த ஆசிய நாடாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் (anti-corruption body Transparency International’)  ஊழல் உணர்வுகள் குறியீடு 2025 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட  கணக்கெடுப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறியீடு முதன்முதலில் 1995  ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதிலிருந்து முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. முன்னதாக 2022 மற்றும் 2023  ஆம் ஆண்டுகளில் 05 ஆவது […]

விளையாட்டு

நமீபியாவை பந்தாடியது நெதர்லாந்து!

  • February 10, 2026
  • 0 Comments

நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. T – 20 உலகக் கிண்ண தொடரில் 10வது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் நெதர்லாந்து அணி 157 ஓட்டங்களை இலக்காக […]

இலங்கை செய்தி

மாணவர்களிடம் நிதி சேகரிக்க தடை: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

  • February 10, 2026
  • 0 Comments

“பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளது. எனினும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் Vedhanayakan தெரிவித்தார். இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் எனவும் அவர் கூறினார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், […]

உலகம்

வடகொரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானம் – விசாரணைகள் ஆரம்பம்!

  • February 10, 2026
  • 0 Comments

வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் குறித்த  விசாரணைகள்  இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தொழில்துறை மையமான கேசோங்கிற்கு ( Kaesong) அருகே  உளவு விமானம் ஊடுறுவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. முக்கியமான இலக்குகள்” குறித்து உளவுத்துறை தகவல்களை சேகரிக்க விமானம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பியோங்யாங்  குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தென்கொரியா, இது வடகொரியாவில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளது. உண்மையை நிலைநாட்ட மூன்று செயலில் […]

உலகம்

சௌவுதி அரேபியாவில் 17 நாடுகளை சேர்ந்தவர்களுக்கான தொழிலாளர் விசா நிறுத்தம்!

  • February 10, 2026
  • 0 Comments

17 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான தற்காலிக தொழிலாளர் விசாவை சௌவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை ஏற்கனவே குறுகிய கால திட்டங்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை பாதித்துள்ளது. இது தொடர்பில் அராசங்கத்திடம் இருந்து முறையான பொது அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், குடியேற்ற பயிற்சியாளர்கள் மற்றும் முதலாளிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது செயற்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதன்படி அல்ஜீரியா, எகிப்து,  எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், ஜோர்டான், லிபியா, […]

அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகர் பதவி விலக வேண்டியதில்லை: NPP திட்டவட்டம்!

  • February 10, 2026
  • 0 Comments

சபாநாயகர் பதவி விலகமாட்டார் என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க Nihal Abeysinghe தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலகவேண்டும் என எதிரணி வலியுறுத்தியுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர், இந்த விசாரணையை கருத்தில் கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே தேசிய மக்கள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள 90 பில்லியன் கடன் – இவ்வாரம் வாக்கெடுப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள 90 பில்லியன் கடன் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த வாரம் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்த மாத இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நி்லையில், முன்னதாகவே வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள செய்தித் தொடர்பாளர் டெல்ஃபின் கோலார்ட் (Delphine Colard), அரசியல் குழுக்களிடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் மேற்படி கடன் வழங்கப்படவில்லை என்றால் தற்போது உக்ரைனின் கையிருப்பில் உள்ள பணம் வரும் ஏப்ரல் மாதத்துடன் தீர்ந்து […]

இலங்கை செய்தி

கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் சிறுத்தைப் புலியின் சடலம் இன்று (10) மீட்கப்பட்டுள்ளது. கம்பி வலையில் சிக்கியே சிறுத்தை உயிரிழந்துள்ளது என நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தைப்புலி (09) ஆம் திகதி இரவு கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்ற போது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுகப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலியொன்று உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் மூலமாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை பரிசோதித்த […]