விளையாட்டு

அனல் பறக்கும் இன்றைய 3 ஆட்டங்கள்!

  • February 12, 2026
  • 0 Comments

ICC Men’s T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (12) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 16 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை Srilanka மற்றும் ஓமான் Oman அணிகள் மோதுகின்றன. கண்டி, பல்லேகல மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் 17 ஆவது லீக் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி Italy , நேபாளம் Nepal அணிகள் மோதுகின்றன. டெல்லியில் இரவு 7 […]

அரசியல் இலங்கை செய்தி

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த யாழ். சிறுவனின் இறுதிக்கிரியை தொடர்பான அறிவித்தல்!

  • February 12, 2026
  • 0 Comments

யாழில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வேன்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபரும் சிறுவனின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டு, முன்னதாக எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இருவரையும் பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் […]

உலகம் செய்தி

இரத்தக் கரை தோய்ந்த கைகளுடன் இஸ்ரேலியப் பிரதமருக்கு எதிராக போராட்டம்!

  • February 12, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இஸ்ரேலிய பிரதமர்  ஏழாவது முறையாக ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரின் வருகைக்கு எதிராக வெள்ளை மாளிகையின் முன்பு ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் போது நெதன்யாகுவின் முகமூடி அணிந்த ஒருவர் ஏவுகணைகளோடும் கையில் போலியான இரத்தக் கரையோடும் தன்னை சித்தரித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதே நேரம் ஏனைய போராட்டக்காரர்கள் காசாவில் இடம் பெற்ற […]

உலகம்

பங்களாதேஷில் இன்று தேர்தல்: ஆயிரத்துக்கு மேற்பட்ட புது முகங்கள் களத்தில்!

  • February 12, 2026
  • 0 Comments

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பங்களாதேஷில் Bangladesh இன்று பொதுத்தேர்தல் general elections நடைபெறுகின்றது. அங்கு நடைபெறும் தேர்தல் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது. தேர்தலில் ஆயிரத்து 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக களமிறங்கியுள்ளனர். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இன்று காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பங்களாதேஷில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மாறும் வானிலை : மக்களின் கவனத்திற்கு!

  • February 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர் காலநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது வரும் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும். சில பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு அயர்ஷையரின் (East Ayrshire) கம்னாக்கில் (Cumnock) வெப்பநிலையானது  -4 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்கொட்லாந்தின் பல பகுதிகளில் பனி பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் 10cm வரை பனி பெய்யும். […]

இலங்கை செய்தி

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • February 11, 2026
  • 0 Comments

“சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை. சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கAnura Kumara Dissanayake தெரிவித்தார். எனவே, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். நுவரெலியாவில் இன்று (11) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான […]

ஐரோப்பா

உக்ரைனில் தேர்தலை அறிவிக்க தயாராகும் ஜெலென்ஸ்கி : ஆட்சி மாற்றம் போரை தணிக்குமா?

  • February 11, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தேர்தல் மற்றும் வாக்கெடுப்பை அறிவிக்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. மோதலின் நான்காவது ஆண்டு நிறைவான பிப்ரவரி 24 அன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒரு சமாதான ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்கா ஜூன் மாதம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஆட்சி மாற்றம் சாதகமான நிலைமையை கொண்டுவரும் […]

உலகம்

100 மில்லியன் இலக்குடன் முன்னணியில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம்!

  • February 11, 2026
  • 0 Comments

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) கடந்த ஆண்டு 95.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து உலக அளவில் பரபரப்பான விமான நிலையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த ஈர்க்கக்கூடிய மைல்கல் துபாயின் நீடித்த பொருளாதார ஏற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. துபாய் கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளில் 05 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை DXB-யிலிருந்து வெளியேறும் மக்களின் முதன்மையான இடமாக  11.9 மில்லியன் பயணிகளுடன் இந்தியா உள்ளது.  அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: நீதியான விசாரணை தொடர்பில் சந்தேகம்!

  • February 11, 2026
  • 0 Comments

“குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகின்றது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam தெரிவித்தார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் நூதனமாக இடம்பெறும் பணமோசடி – மக்களின் கவனத்திற்கு!

  • February 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது. 2024 மற்றும் 2025 க்கு இடையில் இந்த மோசடிகளின் வழக்குகள் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எழுமாறாக ஆண்கள் £2,600 பவுண்ட்ஸ் இழந்தால் பெண்கள் £4,100 பவுண்ட்ஸ் வரை இழக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், தனிமையில் வாழ்பவர்களும் […]