இலங்கை செய்தி

மன்னாரில் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

  • February 14, 2026
  • 0 Comments

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 50 கிலோ கிராமுக்கும் அதிகமான ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்றை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா

அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு போர் கப்பல்களை அனுப்பும் பிரித்தானியா!

  • February 14, 2026
  • 0 Comments

வடக்கு அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளுக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அனுப்பவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர்  ஸ்டாமர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும்” HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பலால் (HMS Prince of Wales) இது வழிநடத்தப்படும் என்றும் கூறினார். இது யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பிற்கான எங்கள் […]

பொழுதுபோக்கு

ஸ்மிருதி மந்தனா–பலாஷ் முச்சல் திருமண விவகாரம் – முச்சல் குறித்து பொதுவெளியில் கருத்து வெளியிட தடை

  • February 14, 2026
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார். பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என தகவல்கள் வெளியாகின. இதனிடையே ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் […]

பொழுதுபோக்கு

காதல் மழை பொழிந்த நயன்தாரா!

  • February 14, 2026
  • 0 Comments

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும், பலகோணங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தே கரம் பிடித்தனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல்: பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!

  • February 14, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார். தேர்தலை இழுத்தடிப்பு செய்யும் எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும், சட்டரீதியிலான ஏற்பாடுகள் முடிந்த பின்னர் அது நடக்கும் எனவும் அவர் கூறினார். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுத்துவருகின்றன. மக்கள் மத்தியில் தமக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் Sundaralingam Pradeep மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா

அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் திருப்பம் – தவளைகளில் இருந்து பெறப்பட்ட கொடிய விஷம்!

  • February 14, 2026
  • 0 Comments

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) டார்ட் தவளைகளில் காணப்பட்ட கொடிய நச்சுப் பொருளைக் உட்கொண்டு சிறையில் உயிரிழந்திருக்கலாம் என இங்கிலாந்து மற்றும் பிற நட்பு நாடுகள் கூறியுள்ளன. நவால்னி எவ்வாறு இறந்தார் என்பதை நிறுவ ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முனிச்சில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் நவல்னியின் மனைவியான யூலியா நவல்னி செய்தியாளர்கள் முன் இதனை தெரிவித்துள்ளார். […]

செய்தி

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

  • February 14, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் 23 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து Scotland அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பெற்று, 5 […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வானிலையில் மாற்றம்

  • February 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக பதிவான பலத்த மழை வீழ்ச்சிக்கு பின்னர் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்க்டிக் காற்றின் தாக்கத்தால் வார இறுதி குளிர்ச்சியாகவும் உறைபனியுடனும் தொடங்கியுள்ளது. குறிப்பாக வடக்கு பகுதிகளில் மிதமான பனிப்பொழிவு மற்றும் பனி படர்ச்சி காணப்படுகின்றது. சனிக்கிழமை பெரும்பாலான இடங்களில் வெயில் காணப்பட்டாலும், இந்த நிலை தற்காலிகமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மேலும் பனியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அலுவலகம் (Met Office), ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு […]

உலகம்

53 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கும் சீனா!

  • February 14, 2026
  • 0 Comments

53 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிப்பை நடைமுறைப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்புடைய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. சீனா, தான் தூதரக உறவுகளைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு மே 1, 2026 முதல் இந்த வரியை அமுற்படுத்தவுள்ளது. இது தொடர்பில் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  கூட்டுப் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திட தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் “பசுமை சேனல்” போன்ற மேம்படுத்தப்பட்ட […]

உலகம் செய்தி

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களின் பேரழிவு – மியூனிக் மாநாட்டில் செலென்ஸ்கி எச்சரிக்கை

  • February 14, 2026
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்கள் ஏற்படுத்தும் பேரழிவு குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி( Volodymyr Zelenskyy) வெளிப்படுத்தியுள்ளார். “ரஷ்ய ஆக்கிரமிப்பினால் ஏற்படும் சவால்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் உங்கள் நாட்டின் நலன்களைப் பாதுகாக்க உலகின் ஆதரவைப் பெறும் போராட்டத்திற்கும் நீங்கள் தயாரா என்றும் Volodymyr Zelenskyy உலக தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ஜனவரி மாதத்தில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாகவும் […]