பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் இரண்டாவது நாளாகவும் பல்வேறு சேவைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் […]













