ஆசியா

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

  • October 3, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில், மிதமான நிலநடுக்கம் ஒன்று இன்று (03.10) உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் 4.7 ஆக பதிவாகிய குறித்த நிலநடுக்கமானது 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை!

உலகம்

தாய்லாந்து தலைநகரில் வணிகவளாகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம் – மூவர் பலி

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பாங்காக் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தத்துடன் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்திய நிலையில், தாய்லாந்து அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். “தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார். உண்மையில், அவர் சரணடைந்தார்,” என்று பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் முன்னதாக […]

இலங்கை

ஆன்லைன் மசோதா அரசியல் அமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு வலியுறுத்தல்!

  • October 3, 2023
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்துள்ள ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான மசோதாவின் சில விதிகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் திரு.தரிந்து உடுவரகெதரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மசோதாவில் உள்ள சில விதிகள் அரசியல் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பிற அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் கூறுகிறார். […]

பொழுதுபோக்கு

“பிக்பாஸ்” நிகழ்ச்சியைக் கண்டு பயந்துவிட்டதா “எதிர்நீச்சல்??” சன்டிவி நிகழ்ச்சிகளில் மாற்றம்

  • October 3, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும், அந்த நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டிஆர்பி கிங் ஆக திகழ்ந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் மற்ற தொடர்களின் நேரங்கள் மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல், ஈரமான ரோஜாவே 2 ஆகிய தொடர்களின் நேரம் மாற்றப்பட்டது. ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பயந்து சன் டிவி […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : சர்வதேச விசாரணைக்கு செல்ல மாட்டோம் – ரணில்!

  • October 3, 2023
  • 0 Comments

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேற்படி ஆட்சேபணை  தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய நீதிபதி, முன்னாள் […]

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் நடித்துள்ள படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம்!

  • October 3, 2023
  • 0 Comments

விஜய் சேதுபதி – பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மேரி கிறிஸ்மஸ்’ திரைப்படம், ஒரு வாரம் முன்கூட்டியே வெளியாகிறது என படக் குழுவினர் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மேரி கிறிஸ்மஸ்’. இந்த திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இந்தத் திரைப்படம் டிசம்பர் 15 ஆம் தேதியன்று வெளியாகும் என […]

இலங்கை

5 மாவட்டங்களுக்கு வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால், தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது . தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .

இலங்கை

கோதுமை மாவிற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது அவசியம்!

  • October 3, 2023
  • 0 Comments

கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொது நிதிக்கான குழுவான கோப்க் குழு  (CoPF) வலியுறுத்தியுள்ளதாக என்று நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கோப் குழு அண்மையில் கூடிய போதே இதற்கான வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பலதரப்பட்ட முறையில் செயல்படும் வகையில் விலை சூத்திரம் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும் கோப்க்  குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் களஞ்சியசாலைகளில் தற்போது உள்ள கோதுமை மாவின் அளவை கணக்கிட்டு 2 மாதங்களுக்குள் கோதுமை மா தொடர்பான […]

ஆசியா

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; டெல்லிவரை அதிர்வு!

  • October 3, 2023
  • 0 Comments

நேபாளத்தை மையமாகக் கொண்டு 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நேபாளத்தில் இன்று மதியம் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

ஐரோப்பா

பின்லாந்தில் அறிமுகமாகியுள்ள டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம்..

  • October 3, 2023
  • 0 Comments

உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது. பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து […]