இந்தியா

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்ட தூதர்களை மீள அழைக்கும் கனடா!

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதர்களை அழைத்து வருமாறு இந்திய அதிகாரிகள் கனடாவிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை, சம்பந்தப்பட்ட தூதர்களை அக்டோபர் 10 ஆம் திகதிக்குள் திரும்ப அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கனடாவில் வாழ்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவராக கருதப்படும் ஹர்தீப் சிங் நஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து மோதல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், இருநாட்டு தூதர்களை அழைத்துக்கொள்ளும் அளவிற்கு தீவிரமாகியுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே