இலங்கை

சிங்கப்பூரில் தங்கம் விலையில் மாற்றம் – 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு

  • October 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை நிலவரப்படி, 24 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை 81.40 வெள்ளிக்கு விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதன் விலை 78.60 வெள்ளி என்று சரிவை சந்தித்தது. அது மேலும் சரிந்து திங்கள்கிழமை நிலவரப்படி 78.30 வெள்ளி என்ற நிலையில் விற்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த வார இறுதியில் நகை கடைகளில் நல்ல கூட்டம் இருந்ததை […]

இலங்கை

இலங்கையில் உயிரை காப்பாற்றிக் கொள்ள பொலிஸ் நிலையம் சென்றவர் மரணம்

  • October 3, 2023
  • 0 Comments

மில்லனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பல தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்து, பொலிஸாரின் தலையீட்டில் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்டவர் மில்லனிய கிம்மன்துடாவ பிரதேசத்தை சேர்ந்த திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையைச் செய்யப்பட்ட நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கனடாவில் தம்பதிக்கு நேர்ந்த கதி – கரடியைக் கருணைக் கொலை செய்யும் அதிகாரிகள்

  • October 3, 2023
  • 0 Comments

கனடாவில் கரடி தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அல்பெர்ட்டா (Alberta) மாநிலத்தில் உள்ள பான்ஃப் (Banff) தேசியப் பூங்காவில் வெள்ளிக்கிழமை அந்தச் சம்பவம் நடந்தது. கனடாவின் தேசியப் பூங்காக் கழகம் அந்தத் தகவலைத் தெரிவித்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் அங்கு இருவர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டனர். அதிகாரிகள் கரடியைக் கருணைக் கொலை செய்ய வேண்டி வந்தது. தேசியப் பூங்காவில் சம்பவம் நடந்த பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று பூங்காக் கழகம் கூறியது. […]

இலங்கை

கம்பளையில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி!

  • October 3, 2023
  • 0 Comments

கம்பளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளது. கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கம்பளை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் வைத்து திடீரென தீப் பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் பிரதேச மக்கள் இணைந்து உடனடியாக தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தனர். தீயினால் முச்சக்கரவண்டிக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அறிவியல் & தொழில்நுட்பம் முக்கிய செய்திகள்

‘Generative AI’ தொழில்நுட்பத்துடன் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய Adobe!

  • October 3, 2023
  • 0 Comments

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான அடோப், புகைப்பட எடிட்டர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அதன் புகைப்பட எடிட்டிங் சாப்ட்வேர் ஆன ஃபோட்டோஷாப்பை இணைய சேவையில் நேரடியாக உபயோகப் படுத்திக்கொள்ளும்படி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிதாக வெளியிடப்பட்ட அடோப் ஃபயர்ஃபிளை ஆனது செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதியான ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இதில் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களான ஜெனரேட்டிவ் ஃபில் மற்றும் ஜெனரேட்டிவ் எக்ஸ்பாண்ட் உட்பட பல அம்சங்கள் உள்ளன. இந்த ஃபோட்டோஷாப்பை இணையத்தில் பயன்படுத்த பீட்டா வெர்சன் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் கொரோனா தொற்று – மீண்டும் தடுப்பூசி வழங்கு பணி ஆரம்பம்

  • October 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கொவிட் 19 பரவல் மீண்டும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், புதிய தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எளிதில் தொற்றுக்குள்ளாகுபவர்கள், நீண்டலாக நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நேற்று முதல் பகுதி பகுதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொவிட் 19 பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. கோடைகாலம் நிறைவுக்கு வந்ததில் இருந்து பல்வேறு நகரங்களில் கொவிட் 19 வைரஸ் மற்றும் அதன் திரிபு வகைகள் பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடந்த […]

செய்தி

சுவிஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வரலாறு காணாத வேகத்தில் உருகும் பனியோடைகள்

  • October 3, 2023
  • 0 Comments

சுவிட்ஸர்லந்தின் வரலாறு காணாத வேகத்தில் பனியோடைகள் உருகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இராண்டுகளில் மட்டும் அவற்றின் ஒட்டுமொத்த அளவு 10 சதவீதம் சுருங்கியுள்ளது. இதேவேகத்தில் அவை உருகினால், ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பனியோடைகள் முற்றிலும் காணாமல்போகும் சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள பாதிக்கும் அதிகமான பனி ஓடைகள் சுவிட்ஸர்லந்தில் இருக்கின்றன. பருவநிலை மாற்றத்தின் காரணமாக அங்கு வெப்பநிலை அதிவேகமாகக் கூடிவருகிறது. பூமியிலுள்ள மற்ற பகுதிகளின் சராசரியை விட சுமார் இருமடங்கு வேகமாக அது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பல லட்ச அகதிகளுக்கு அதிர்ச்சி – நிராகரிக்கப்பட்ட அகதி விண்ணப்பம்

  • October 3, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியான சி டி யு கட்சியுடைய தலைவர் பிரக்டிஸ் மேஸ் அவர்கள் நாட்டில் உள்ள அகதிகள் பற்றி தனது விசனத்தை தெரிவித்து இருக்கின்றார். ஜெர்மனி நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்பாக மிகவும் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது நிராகரிக்கப்பட்ட அகதிகள் நாடு கடத்தப்படாமல் இந்த நாட்டிலேயே வைத்தியசாலைக்கு சென்று தங்களது வைத்திய தேவையை பூர்த்தி செய்தார்கள் என்றும் பல ஜெர்மனியர்கள் தங்களது வைத்திய உதவிக்காக வைத்தியசாலைகளில் காத்திருக்க […]

இலங்கை

இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல – பிரபல தேரர் அறிவிப்பு

  • October 3, 2023
  • 0 Comments

இலங்கையில் பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல என கொழுப்பு பாமன்கடை ஸ்ரீமகா விஹாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார். அது முழு உலகிற்கும் சொந்தமானது.பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எம்பிக்கள் மனோ கணேசன், […]

விளையாட்டு

சிலை காரணமாக சவுதி-ஈரான் ஆசிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் ரத்து

  • October 2, 2023
  • 0 Comments

ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் சவுதி மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி மைதானத்தின் நுழைவாயிலில் ஈரானின் முன்னாள் மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியின் சிலை இருப்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. சவூதியின் அல் இத்திஹாத் மற்றும் ஈரானின் செபஹான் இடையே திட்டமிடப்பட்ட மோதல் ஈரானின் இஸ்பஹானில் உள்ள நாக்ஷ்-இ ஜஹான் ஸ்டேடியத்தில் உள்ள ஆடை அறையை விட்டு வெளியேற சவுதி அணி மறுத்ததால் ஒத்திவைக்கப்பட்டது. “வீரர்கள், போட்டி அதிகாரிகள், பார்வையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பு […]