பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிரடியாக வெளியானது லியோ ட்ரெய்லர்
2023-ம் ஆண்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் இயக்கியுள்ள லியோ படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. […]













